Wednesday, March 12, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு14 வயது சிறுமியை வன்புணர்ந்த 22 வயது இளைஞன் கைது

14 வயது சிறுமியை வன்புணர்ந்த 22 வயது இளைஞன் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 14 வயது சிறுமி ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இளைஞனும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் காதலனான மேற்படி இளைஞன், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, குறித்த இளைஞனும், உதவிய குற்றச்சாட்டில் அவரது தாயாரும் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமிக்கு தந்தை இல்லை எனவும் தாய் வேலை வாய்ப்புக்காக மத்தியகிழக்கு நாடு ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் சிறுமி உறவினருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் குறித்த சிறுமியை இளைஞன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு தங்கவைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளதுடன், இது தொடர்பாக பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவதினமான நேற்று சிறுமியை அடைத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிலும் அவரும், அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles