Monday, November 24, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு

மேல் மாகாணத்தில் உள்ள முசச்சக்கரவண்டிகளின் இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

இதன்படி இரண்டாவது கிலோமீட்டருக்கு தற்போது அறவிடப்படும் 100 ரூபாவினை 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண குறைப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலாக்கப்படவுள்ளது.

எனினும், இந்தக் கட்டணக் குறைப்பின் கீழ் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றம் இருக்காது.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் தொடர்பில் 076 045 0860 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது வட்ஸ்எப் ஊடாகவோ அறிவிக்குமாறு வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles