Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோராட்டத்தில் ஈடுபட்டதால் வேலையை இழந்த ரயில் ஊழியர்கள்

போராட்டத்தில் ஈடுபட்டதால் வேலையை இழந்த ரயில் ஊழியர்கள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் பொது முகாமையாளர்கள் தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன கடுமையான தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர், பணிக்கு சமூகமளிக்கத் தவறிய ரயில் ஊழியர்கள் பணியிடை விலகியவர்களாக கருதி, கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 09ஆம் திகதி நள்ளிரவு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நேற்று நண்பகல் 12 மணிக்குள் பணிக்கு சமூகமளிக்காவிட்டால், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்கள் பணியை கைவிட்டதாக கருதப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பதில் பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles