Thursday, May 1, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுவரெலியாவில் பேருந்து விபத்து: 25 பேர் காயம்

நுவரெலியாவில் பேருந்து விபத்து: 25 பேர் காயம்

நுவரெலியாவில் இருந்தது திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles