Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்து வெளிநாட்டு யுவதி மரணம்

நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்து வெளிநாட்டு யுவதி மரணம்

எல்ல – பல்லேவெல நீர்வீழ்ச்சியிலிருந்து புகைப்படமெடுக்க முயற்சித்த வெளிநாட்டவரொருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நீர்வீழ்ச்சியின் உயரத்திலிருந்த புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பத்தில் சுமார் 200 அடி பள்ளத்தில் அவர் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

19 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி அவர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்தார். தனது காதலனுடன் நாட்டிற்கு வந்த அவர் எல்ல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயணித்துள்ளார்.

மேலும் சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பல்லேவெல நீர்வீழ்ச்சிக்கு அவர் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles