Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிசு செரிய திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை

சிசு செரிய திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசு சரிய போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் அசௌகரியங்கள் இன்றி உரிய நேரத்திற்கு பாடசாலை சென்று மீண்டும் பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்லக்கூடிய விதத்தில் சிசு சரிய போக்குவரத்து சேவையானது 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கி 1,537 பாடசாலை பஸ் சேவைகள் தற்போது இயங்கி வருகின்றன, நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்கள் இந்த போக்குவரத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த ஆண்டில் புதிதாக 500 சிசு சரிய பஸ் சேவைகளை ஆரம்பிக்க தேவையான 202 மில்லியன் ரூபாவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிதியில் இருந்து ஒதுக்குவதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles