நீண்ட காலமாக மேலதிக வகுப்புகளுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நால்வரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரபே புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும் குருகுலாவ பிரதேசத்தில் உள்ள உதவி வகுப்புக்கு அருகாமையிலும் ஹெயின்கெந்த முதித மாவத்தையிலும் நேற்று (10) சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, ராகம மற்றும் குருகுலாவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 கிராம் 930 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள், 6,600 ரூபா பணம், இலத்திரனியல் தராசு மற்றும் 03 கையடக்கத் தொலைபேசிகள் என்பனவற்றுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளுக்காக நால்வரும் ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.