Thursday, October 23, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் தொடர்பான புதிய அறிவிப்பு

மின் கட்டணம் தொடர்பான புதிய அறிவிப்பு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ, இதற்கு முன்னர் பதிவு செய்த பல்வேறு தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 46 பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டதாக குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

அந்த முன்மொழிவுகளின்படி, குறைக்கப்படும் கட்டணங்களின் ஒட்டுமொத்த சதவீதம் 13.8% ஆகும்.அதன்படி, குடும்ப அங்கத்தவர்களின் கட்டணத்தில் 25.5% குறைப்பும், மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு 3% குறைக்கப்படும்.

எவ்வாறாயினும், இந்த முன்மொழிவுகளின்படி, ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைக்கான கட்டணக் குறைப்பு எதுவும் முன்மொழியப்படவில்லை

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles