Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோராட்டத்தில் ஈடுபடும் ரயில் ஊழியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபடும் ரயில் ஊழியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கை ரயில்வே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று மதியம் 12.00 மணிக்கு அந்தந்த ரயில் நிலையம் அல்லது அருகில் உள்ள ரயில் நிலையத்தில் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை பொருட்படுத்தாது பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சேவையில் இருந்து விலகி சென்றதாக கருதப்படுவார்கள் என ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ். எஸ். முதலிகே தெரிவித்துள்ளார்.

இலங்கை ரயில் ​சேவை, அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படுள்ள நிலையில், இந்த பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles