Saturday, May 3, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்யா சென்றார் மோடி

ரஷ்யா சென்றார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா நோக்கி பயணமாகியுள்ளார்.

ரஷ்யய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி தனது பயணத்தின் போது 22வது இந்தியா-ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என்று இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் மேம்படுத்தக் கூடியது என்பதால், இந்தியாவுக்கு சிறப்பு வாய்ந்தது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ரஷ்யா – யுக்ரைன் மீது படையெடுத்த பின்னர், மோடி அங்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

ரஷ்ய விஜயத்தின் பின்னர், இந்தியப் பிரதமர் ஆஸ்திரியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், 41 வருடங்களின் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles