Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுமி சடலமாக மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுமி சடலமாக மீட்பு

முகத்தில் இரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நிவித்திகலை, வட்டாபொத்த, யொஹூன் கிராமத்தில் உள்ள இறப்பர் தோட்டத்திற்கு அருகில் உள்ள ஒத்தையடி பாதையில் இருந்து நேற்று (08) நிவித்திகல பொலிஸார் சடலத்தை கண்டு பிடித்துள்ளனர்.

வட்டாபொத்த, யொஹூன் கிராமம் பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்தவரின் தாயார் வட்டபொத்த விகாரைக்கு அருகில் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருவதோடு, சம்பவத்தன்று சிறுமி பாடசாலைக்கு செல்லாததால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை விற்பனை நிலையத்திற்கு வருமாறு தாய் தொலைபேசி அழைப்பொன்றை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விற்பனை நிலையத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், தாய் வீட்டுக்கு ஒத்தையடி பாதை வழியாக சென்ற போதுஇ ​​மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​இறப்பர் மரத்தில் வெட்டப்பட்ட இறப்பர் மரத்தின் கிளை சிறுமியின் மீது விழுந்ததில் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles