Monday, November 24, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅலி சப்ரி ரஹீமுக்கு திறந்த பிடியாணை

அலி சப்ரி ரஹீமுக்கு திறந்த பிடியாணை

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான அயோனா விமலரத்ன கல்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருஞம்பிட்டிய தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமொன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினரை பிரதிவாதியாக மொழியப்பட்ட வழக்கை விசாரித்த போதே நீதவான் இந்த உத்தரவை வழங்கினார்.

இதற்கு முன்னரும், பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, உறுப்பினர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கல்பிட்டி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles