Sunday, April 19, 2026
33.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅத்துருகிரிய துப்பாக்கிச்சூடு: 6 பேர் கைது

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு: 6 பேர் கைது

அத்துருகிரியவில் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 06 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் குறித்த பச்சை குத்தும் நிலையத்தில் உரிமையாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதுருகிரிய நகரின் ஒருவல பகுதியில் அமைந்துள்ள பச்சை குத்தும் நிலையத்தில் நேற்று காலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

முகமூடி மற்றும் தொப்பி அணிந்து வெள்ளை நிற காரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

துப்பாக்கிதாரிகள் குறித்த வர்த்தக நிலையத்துக்குள் அங்கு அமர்ந்திருந்த பிரபல தொழிலதிபர் க்ளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் க்ளப் வசந்த உட்பட இருவர் பலியாகினர்.

இந்நிலையில், க்ளப் வசந்தவின் மனைவி மற்றும் பிரபல பாடகி சுஜீவா ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles