Saturday, April 19, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டு1,700 ரூபா சம்பளத்தை கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

1,700 ரூபா சம்பளத்தை கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளத்தை பெறுந்தோட்ட நிறுவனங்கள் வழங்குமாறு கோரி பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மற்றும் அக்கரப்பத்தனை ஆகிய தோட்ட தொழிலாளர்கள் இன்று (08) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் தொடர்பான வர்த்தமானி நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது .

அதன் அடிப்படையில் இன்று பெறுந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாத்திரம் ஒவ்வொரு முறையும் சம்பளத்தை பெற வேண்டுமானால் நாங்கள் போராட வேண்டியுள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு தேயிலை உற்பத்தி துறையில் நஷ்டம் ஏற்படுமாயின் பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்டங்களை அரசாங்கத்திற்கு ஒப்படைத்து விட்டு செல்லுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles