Tuesday, November 11, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுTIN இலக்கத்தை பெற்றாலும் வரி செலுத்துவதைத் தவிர்க்க முடியுமாம்

TIN இலக்கத்தை பெற்றாலும் வரி செலுத்துவதைத் தவிர்க்க முடியுமாம்

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றாலும், அவர்களின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்தினை தாண்டாது இருப்பின் வரி செலுத்த தேவையில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அருகில் உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள பிராந்திய அலுவலகத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை 23 இலட்சம் பேர் டின் நம்பர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் மட்டும் 13 இலட்சம் பேர் அந்த எண்ணிக்கையைப் பெற்றுள்ளனர்.

ஜூலை மாத இறுதிக்குள் டின் எண்கள் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 73 இலட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles