Monday, September 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உலகம்14 ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம்

14 ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம்

பிரித்தானிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.

இதுவரையில் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி 386 ஆசனங்களையும், ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி 92 ஆசனங்களையும் வென்றுள்ளன.

இன்னும் 93 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளியாகவேண்டியுள்ள போதும், ஆட்சியமைக்க அவசியமான 326 ஆசனங்களைத் தொழிலாளர் கட்சி கடந்துள்ளது.

அதன்படி, புதிய பிரித்தானிய பிரதமராக கீர் ஸ்டார்மர் நியமிக்கப்படுவார்.

பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles