Friday, May 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெஹெலியவின் குடும்பத்தாரின் 16 நிலையான வைப்புகளுக்கு தடை

கெஹெலியவின் குடும்பத்தாரின் 16 நிலையான வைப்புகளுக்கு தடை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களின் 16 நிலையான வைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, கெஹெலியவின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகளின் கணவர் ஆகியோருக்கு சொந்தமான 16 நிலையான வைப்புக்கள் மற்றும் 03 காப்புறுதிகளை தடை செய்ய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த கணக்குகள் அனைத்தும் 07 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கணக்குகளின் பெறுமதி சுமார் 93.12 மில்லியன் ரூபாவாகும்.

சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் மூலம் இந்தப் பணத்தை சம்பாதித்திருக்கலாம் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சந்தேகித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles