Sunday, October 12, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹிருணிகாவின் பிணை மனு ஒத்திவைப்பு

ஹிருணிகாவின் பிணை மனு ஒத்திவைப்பு

மூன்று வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இந்த பிணை கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்டது.

இந்த கோரிக்கை தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாகவும், எழுத்து மூலம் அந்த ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்குவதாகவும் அரசாங்க சட்டத்தரணி அங்கு தெரிவித்தார்.

இதன்படி, சட்டமா அதிபருக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அனுமதித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிணை கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles