கண்டி பிரதேசத்தில் கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடுகண்ணாவை மற்றும் பிலிமத்தலாவை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் மார்க்கத்தில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (3) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த ரயில் மோதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபரின் சடலம் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.