Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து - லொறி மோதி விபத்து: 25 பேர் வைத்தியசாலையில்

பேருந்து – லொறி மோதி விபத்து: 25 பேர் வைத்தியசாலையில்

சிலாபம் – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (04) காலை மாதம்பே, கலஹிடியாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles