Sunday, August 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுண்டு புரளியை கிளப்பிய நபர் சிக்கினார்

குண்டு புரளியை கிளப்பிய நபர் சிக்கினார்

கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இன்று (02) விசாரணைக்கு வரவிருந்த அனைத்து வழக்குகளும் ஜூலை 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக இன்று (02) காலை 10 மணியளவில் பொலிஸ் அவசர பிரிவுக்கு (119) தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து பொலிஸார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.

இதன்போது இராணுவ வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரும் விசேட அதிரடிப்படையினரும் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைத்து பொதுமக்களும் வௌியேற்றப்பட்ட பின்னர் தீவிர தேடுதல் நடவடிக்கைள மேற்கொள்ளப்பட்டன இருப்பினும் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles