Monday, July 7, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெவோன் படகு: உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு

டெவோன் படகு: உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு

டெவோன்-5 பல நாள் மீன்பிடி படகின் தலைவர் உட்பட உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நட்டஈடு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடலில் மிதந்த போத்தலில் இருந்து பானத்தினை குடித்ததால் இந்த துரதிர்ஷ்டவசமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், டெவோன்-5 படகில் உள்ள பேரிடர் கண்காணிப்பு பொத்தான் இயக்கப்பட்டு பேரிடர் குறித்து அறிவிக்கப்படாதது வேதனையான உண்மை என்றும் அமைச்சர் கூறுகிறார்.

இவ்வாறு அவர்களுக்கு அறிவித்திருந்தால் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் அமைச்சர் கூறுகிறார்.

Devon-5 படகு நிலத்திலிருந்து 360 கடல் மைல் தூரம் அதாவது 600 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளதாகவும், விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் மூலம் இவ்வளவு தூரம் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததாகவும், குறித்த படகு சுமார் ஒரு ஹெலிகொப்டர் சாதாரணமாக பயணிக்கக்கூடிய தூரத்தை விட 04 மடங்கு தூரத்தில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles