Wednesday, September 17, 2025
25 C
Colombo
செய்திகள்விளையாட்டுரோஹித் - கோலி - ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

ரோஹித் – கோலி – ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக இந்திய அணி வீரரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அறிவித்தனர்.

17 ஆண்டுகளின் பின்னர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றதைத் தொடர்ந்து குறித்த இருவரும் இவ்வாறு ஓய்வினை அறிவித்துள்ளனர்.

125 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 4,188 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அத்துடன் 159 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் ஷர்மா 4,231 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய அணியின் சகலதுறை வீரரான ரவீந்திர ஜடேஜா சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடுவேன் எனவும் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles