செய்திகள்உள்நாட்டுமூத்த அரசியல் தலைவர் சம்பந்தன் காலமானார்

மூத்த அரசியல் தலைவர் சம்பந்தன் காலமானார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான இரா. சம்பந்தன் காலமானார்.

91 வயதான அவர் கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் மலர்சாலையில் வைக்கப்பட்டு அதன் பின்னர் அவரது பூதவுடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles