Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதில் சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்

பதில் சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்

பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அவர் தலைமை நீதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26ஆம் திகதி முடிவடைந்த நிலையில், சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது.

இதன்படி, பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்கவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாரிந்த ரணசிங்க இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ.பாரிந்த ரணசிங்கவின் மகன் ஆவார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles