Thursday, September 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசம்பந்தனின் மறைவுக்கு இந்திய பிரதமர் இரங்கல்

சம்பந்தனின் மறைவுக்கு இந்திய பிரதமர் இரங்கல்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்தி மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் மறைவு குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கலில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். சம்பந்தன் உடனான இனிய நினைவுகள் எப்போதும் நினைவுகூரப்படும் என பதிவிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஆர்.சம்பந்தன் இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவதிற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் என தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles