Friday, March 14, 2025
28.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் நாளை 15 மணிநேர நீர்வெட்டு

கொழும்பில் நாளை 15 மணிநேர நீர்வெட்டு

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக, கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகத் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles