Friday, March 14, 2025
28.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் 50 வீதமான பெண்கள் பருமனால் பாதிப்பு

இலங்கையில் 50 வீதமான பெண்கள் பருமனால் பாதிப்பு

இலங்கையில் உள்ள பெண்களில் 50 வீதமானவர்கள் பருமனாக இருப்பதாக இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் தலைவர் கலாநிதி திருமதி விக்ரமசேகர கூறுகையில், குழந்தைகளிடையேயும் உடல் பருமன் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

“உடல் பருமன் பற்றி நாம் மறந்துவிட்டோம். நாங்கள் எப்போதும் ஊட்டச்சத்து குறைபாட்டின் மீது கவனம் செலுத்துகிறோம்.

ஆனால் குழந்தை பருவ உடல் பருமன் அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 50% பெண்கள் அதிக எடை மற்றும் பருமனானவர்கள்.

இதனால் இலங்கைக்கு ஒரு புதிய ஆராய்ச்சி தரவு கட்டமைப்பு தேவை.” எனவும் தலைவர் கலாநிதி திமதி விக்ரமசேகர கூறினார்.

இந்நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு குறைந்துள்ள போதிலும், அதிகப்படியான போசாக்கின்மை அதிகரித்துள்ளதாக கலாநிதி விக்கிரமசேகர மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles