உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாக, பொது ஊழியராக, மாற்றீடாக, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் நிவாரண அடிப்படையில் இருக்கும் ஊழியர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் கூடிய நியமனத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் தினேஷ் குணவர்தன இதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்திருந்தார்.
இதற்கமைய நாடு முழுவதிலுமுள்ள பிரதேச சபை, நகர சபை, மாநகர சபைகளில் குறித்த சேவைகளின் அடிப்படையில் கடமையாற்றும் 8435 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
குறித்த நியமனக் கடிதங்களை உடனடியாக வழங்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அண்மையில் இடம்பெற்றது. ஜீலை மாதத்தில் இதனை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது.