அதிக மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று (27) திறக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் மேலும் மழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் ஏனைய வான்கதவுகள் திறக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.