Thursday, June 25, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொது கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு

பொது கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு

நுவரெலியா பேருந்து நிலையத்தின் பொது கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (26) மாலை கழிப்பறையில் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், 1990 எம்புலன்ஸ் சேவை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, குறித்த நபர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர்.

நுவரெலிய – ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles