பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் கடும் வெப்பம் காரணமாக சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு வெப்பநிலை 49 மற்றும் 50 செல்சியஸ் பாகையாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் 60-70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அல்லது 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியில் வேலை செய்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.