Tuesday, March 11, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடயனாவுக்கு எதிரான வழக்கில் இருந்து 2 நீதிபதிகள் விலகல்

டயனாவுக்கு எதிரான வழக்கில் இருந்து 2 நீதிபதிகள் விலகல்

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தாக்கல் செய்த மனுவை பரிசீலிப்பதில் இருந்து இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர்.

வெலிகம மாநகர சபையின் உறுப்பினர் பதவியை நீக்கி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் மூலம் டயனா கமகே நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் கூறி, வெலிகம மாநகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரமவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று (26) பிரிதி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, ​​இந்த மனுக்களை பரிசீலனை செய்வதிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக, சம்பந்தப்பட்ட பெஞ்சின் அங்கத்தவர் நீதிபதிகளாக கடமையாற்றிய குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த மனுவை ஆகஸ்ட் 5-ம் திகதி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திகதியை நிர்ணயம் செய்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles