Friday, February 7, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனா சென்றார் மஹிந்த

சீனா சென்றார் மஹிந்த

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார்

பெய்ஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ள அமைச்சர் வாங் யீ விடுத்த அழைப்பின் பேரில் அவர் சீனா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்னிலையில் அவர் அங்கு தங்கியிருக்கும் போது சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பிரதமர் லீ கியாங் மற்றும் அமைச்சர் யீ ஆகியோருடன் இலங்கைக்கு நன்மை பயக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவார் என்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதுடன் மற்றும் சீனா மற்றும் சீனாவின் எக்சிம் வங்கி அளித்த உதவிக்கு தனது நன்றியைத் அவர் அங்கு வெளிப்படுத்துவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles