அமெரிக்காவில் கடும் வெப்பம் நிலவி வருவதால், அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கனின் மெழுகுச் சிலை உருகியுள்ளது.
6 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள அந்தச் மெழுகுச் சிலையின் தலைப்பகுதி வெப்பத்தால் உருகி கீழே வளைந்துள்ளது.
திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த ஆபிரகாம் லிங்கன் சிலையின் சேதமடைந்த தலைப் பகுதியை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.