இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நிறைவு செய்தமையானது, நாட்டின் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான பயணத்தில் சாதகமான செயற்பாடாகும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பொருளாதார மீட்சிக்கான பயணத்தின் முக்கிய மைல்கற்களான கடன் உடன்படிக்கைகளை நிறைவு செய்தல் போன்ற கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் நிலைத்தன்மையை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக இலங்கை மேற்கொண்டுள்ள முக்கிய நடவடிக்கை இதுவாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் கூறினார்.
எதிர்காலத்தில் வௌியக தனியார் கடன் வழங்குநர்களுடனான உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் விரைவில் ஏற்படுத்திக்கொள்ளும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.