Wednesday, April 30, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெரோயினை கடத்திய படகின் உரிமையாளர் கைது

ஹெரோயினை கடத்திய படகின் உரிமையாளர் கைது

நேற்று (25) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 200 கிலோ ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற ‘ஜேக்கப் சன்’ என்ற பல நாள் மீன்பிடி படகின் உரிமையாளர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெரோயின் கைப்பற்றப்பட்ட தகவல் அறிந்த பின்னர் மாலைதீவுக்கு தப்பிச் செல்வதற்காக குறித்த படகின் உரியைமாயளர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, பலகத்துரை பிரதேசத்தைச் சேர்ந்த வர்ணகுலசூரிய அன்டர்சன் இந்திக்க பெர்னாண்டோ என்ற 38 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலைதீவுக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்த Emirates Airlines விமானமான EK-653 இல் செல்வதற்காக அவர் நேற்றிரவு 08.35 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்தார்.

கைது செய்யப்பட்ட வர்த்தகர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கையிருப்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles