Monday, January 19, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெட்டுக் காயங்களுடன் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு

வெட்டுக் காயங்களுடன் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு

பலபிட்டிய, ஆவாச தோட்டம் சந்தியில் வெட்டுக் காயங்களுடன் மலர்சாலை உரிமையாளர் ஒருவரின் சடலம் நேற்று (25) இரவு மீட்கப்பட்டுள்ளது.

தெல்வத்தை மலவெண்ண பிரதேசத்தைச் சேர்ந்த ஜீ.பி. துசித குமார என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

குறித்த நபரின் தலையில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 11 மணியளவில் பலபிட்டிய ஆவாச தோட்டம் சந்தியில் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அதன் சாரதி காயங்களுடன் சடலமாக காணப்படுவதாகவும் பலப்பிட்டிய பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles