Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெற்றோலிய கூட்டுத்தாபனம் மறுசீரமைப்பு - கலந்துரையாடல் ஆரம்பம்

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மறுசீரமைப்பு – கலந்துரையாடல் ஆரம்பம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான தனி நிறுவனமாக அமைப்பது தொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதை அதிகரிப்பதற்கான பல நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் சம்பள அமைப்பும் திருத்தப்பட்டு பல செயல்பாடுகள் மற்றும் சேவைகளுக்கான டிஜிட்டல் தளங்களும் இதன் கீழ் அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles