Thursday, May 1, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் பாடசாலைகளை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்கான புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எதிர்வரும் சில வருடங்களில் பல புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles