Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து - மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

மன்னார் – முருங்கன் பகுதியில் நேற்று (24) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மன்னாரிலிருந்து மெதவச்சி நோக்கி பயணித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

நானாட்டான் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சுந்தரலிங்கம் தீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles