Thursday, May 1, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்ஜூலியன் அசாஞ்சே விடுதலை

ஜூலியன் அசாஞ்சே விடுதலை

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்க இரகசிய ஆவணங்களை வெளியிட்டமை காரணமாக, விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்க நீதித்துறை 18 குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

அதன்படி, அவர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு இலண்டனில் உள்ள அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பெல்மார்ஷ் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles