Friday, May 23, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமூக வலைத்தள மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சமூக வலைத்தள மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகள் அதிகரித்துள்ளதால், அது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கையின் கணினி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேஸ்புக், வட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றின் ஊடாக தகவல்களை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

குறிப்பாக தேசிய மற்றும் மத ரீதியான பண்டிகைக்காலங்களை இலக்கு வைத்து இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றன.

இதற்காக பிரபலமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனைய பல வர்த்தக நாமங்கள் போலியான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

அறியாத நபர்களிடமிருந்து வருகின்ற குறுஞ்செய்திகளில் இருக்கின்ற லின்க்களை மக்கள் க்ளிக் செய்வதன் மூலம், இணைய மோசடிக்காரர்கள் பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்களைக் களவாடுகின்றனர்.

அவற்றைப் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபடுவதுடன், சில தரப்பினர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றிருப்பதாக அல்லது அன்பளிப்புகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகக் கூறி, அவற்றைப் பெற்றுக் கொள்ள ஒருதொகை பணத்தை வைப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியும் நிதி மோசடி செய்கின்றனர்.

அறியாத நபர்களிடமிருந்து கிடைக்கின்ற இவ்வாறான குறுஞ்செய்திகளை திறப்பதற்கு முன்னர், அவர்கள் குறிப்பிடுகின்ற நிறுவனங்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்துக்குச் சென்றோ அல்லது தொலைபேசியில் அழைத்தோ, தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles