Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

யக்கலமுல்ல பிரதேசத்தில் நேற்று (24) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்பகொட பிரதேசத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் அல்லது சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles