ட்ரோன் கெமரா தொழில்நுட்பத்தின் மூலம் யால சரணாலயத்தில் மிக நுணுக்கமாக பயிரிடப்பட்ட இரண்டு கஞ்சா தோட்டங்களை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உடவலவ முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் கடந்த 23 ஆம் திகதி யால சரணாலயத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
அங்கு சட்டவிரோதமான முறையில் 35 பேர்ச் பரப்பளவில் வளர்க்கப்பட்ட 6,786 கஞ்சா செடிகளும், 25 பேர்ச்சஸ் பரப்பளவில் வளர்க்கப்பட்ட 5,954 கஞ்சா செடிகளும் மீட்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளுக்காக 20 கஞ்சா செடிகள் கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய கஞ்சா செடிகள் எரித்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.