Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமைப் பத்திரம்

கொழும்பில் 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமைப் பத்திரம்

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உரிமைப் பத்திரம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இலவசப் பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் 50,000 பேருக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்ததுடன் அதற்கேற்ப இந்த உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு 22 குடியிருப்புகளில் 14559 வீடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.இது தவிர தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை 1070 பத்திரங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, முதற்கட்டமாக, மிஹிந்து சென்புர, சிறிசர தோட்டம், மெட்சர தோட்டம், லக்முத்து செவன, சிறிமுத்து தோட்டம் ஆகிய திட்டங்களை மையப்படுத்தி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles