சுமார் 15 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த ஒருவரின் சடலம் நாகொடையில் உள்ள வயல்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அகலவத்தை. ஹாலெம்ப பிரதேசத்தைச் சேர்ந்த பி.எச். சிறிசேன 82 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.
உயிரிழந்தவரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை காணவில்லை என அவரது உறவினர்கள் களுத்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.