Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை தூதுக் குழு ரஷ்யா பயணம்

இலங்கை தூதுக் குழு ரஷ்யா பயணம்

ரஷ்ய – உக்ரேன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று (24) ரஷ்யா செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு ரஷ்யாவுக்கு பயணிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசேட தூதுக்குழுவுக்கும் ரஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு மொஸ்கோவில் இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது பல சுற்று இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles