Saturday, April 19, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீதியில் விழுந்து கிடந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு

வீதியில் விழுந்து கிடந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு

புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமீரகம கிராம மையவாடிக்கு அருகில் உள்ள வீதியில் இளம் பெண்ணின் சடலமொன்று இன்று (21) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சமீரகம பகுதியில் உள்ள தென்னைத் தோட்டமொன்றில் வசித்து வந்த 26 வயதான பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டனர்.

மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இன்று (21) அதிகாலை 3.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய குறித்த இளம் பெண், மீண்டும் வீடு திரும்பாததை அடுத்து, குறித்த பெண்ணின் கணவர் அவரை தேடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே குறித்த பெண் இருந்த தோட்டத்திற்கு முன்னால் உள்ள வீதியில் காணப்பட்ட வெள்ளநீருக்குள் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளம் பெண்ணுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதாக குடும்பத்தாரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

அத்துடன், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி, மரண விசாரனைகளை மேற்கொண்ட பின்னர், சடலத்தை பிரேத பிரசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு அறிவித்தார்.

சடலம் பிரேத பிரசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles