Thursday, April 10, 2025
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக தமிழகத்துக்கு சென்ற இலங்கையர்கள் இருவர் கைது

சட்டவிரோதமாக தமிழகத்துக்கு சென்ற இலங்கையர்கள் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் மேற்படி இருவர் வந்திறங்கியதாக கிடைத்த தகவல் அடிப்படையில் ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவர்கள் இருவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்குள் தஞ்சமடைய வந்தார்களா அல்லது கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles